• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020‑10‑01 ஆம் திகதியிலிருந்து 2021‑05‑31 ஆம் திகதிவரையிலான எட்டு (08) மாதக் காலப்பகுதிக்கு மேர்பன் மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 2020‑10‑01 ஆம் திகதியிலிருந்து 2021‑05‑31 ஆம் திகதிவரையிலான எட்டு (08) மாதக் காலப்பகுதிக்கு மேர்பன் மசகு எண்ணெய் 8,400,000+/- 5% பெரல்கள் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தினை சிங்கப்பூர் M/s. Emirates National Oil Company இற்கு வழங்கும் பொருட்டு வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.