• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரசாயன பசளை கொள்வனவு - 2020 பெரும்போகம் - ஒக்ரோபர் மாதம்
- 2020 பெரும்போகத்தில் ஒக்ரோபர் மாத இறுதியில் தேவைப்படும் இரசாயன பசளையை கொள்வனவு செய்வதற்காக சருவதேச திறந்த போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 60,000 மெற்றிக் தொன் யூரியா (Granular) 180 நாட்கள் கொண்ட கடன் காலப்பகுதியின் கீழ் மெற்றிக் தொன் ஒன்று 298.34 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதம் M/s Agrifert Liven International Ltd. நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.