• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்காக துணை மருத்துவ கட்டடத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை வழங்குதல்
- இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்காக துணை மருத்துவ கட்டடத்தை நிர்மாணிக்கும் பொருட்டு வடிவமைத்து, நிர்மாணித்து, கையளிக்கும் அடிப்படையில் தேசிய ரீதியில் போட்டிகரமான கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் துணைமருத்துவ கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை 1,013.87 மில்லியன் ரூபா மற்றும் பெறுமதிசேர்க்கப்பட்ட வரியுடனான தொகைக்கு M/s. Maga Engineering (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிப்பதற்காக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.