• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிள்ளைகள் மற்றும் இளையோர் பற்றிய கட்டளைச் சட்டத்தையும் இளைய குற்றவாளிகள் (பயிற்சி பாடசாலைகள்) பற்றிய கட்டளைச் சட்டத்தையும் திருத்துதல்
- பிள்ளைகள் மற்றும் இளையோர் பற்றிய கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக 14 வயதிற்கு குறைந்த ஒருவர் 'பிள்ளை்' என வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் இளைய குற்றவாளிகள் (பயிற்சி பாடசாலைகள்) பற்றிய கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக 16-22 வயதிற்கு இடைப்பட்டவர்கள் 'இளையோர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 16 வயதிற்கு குறைந்த பிள்ளைகளினால் இழைக்கப்படும் பிழைகள் சம்பந்தமாக நீதிமன்றத்தினால் சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக சிறுவர், நன்னடத்தை பாதுகாவல் திணைக்களத்தினால் செயற்படுத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட நன்னடத்தைப் பாடசாலைகளுக்கு தொடர்புபடுத்தப்படுவதோடு, 16 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளினால் புரியப்படும் குற்றங்கள் சம்பந்தமாக நீதிமன்றத்தின் ஊடாக சிறைத்தண்டனை அல்லது இளைய குற்றவாளிகளுக்கான பயிற்சி பாடசாலைகளுக்கு தொடர்புபடுத்தப்படுகின்றனர். ஆயினும் சிறுவர் உரிமைகள் பற்றிய நியதிச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் 18 வயதிற்கு குறைந்தவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடாதென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால், இந்த சட்டரீதியிலான உட்சிக்கல் நிலைக்கு தீர்வொன்று கிடைக்கும் விதத்தில் பிள்ளைகள் என்னும் போது 18 வயதிற்கு குறைந்த ஒருவரென வரைவிலக்கனப்படுத்தும் பொருட்டு பிள்ளைகள் மற்றும் இளையோர் பற்றிய கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கும் இதற்கு ஒருங்கிணைவாக இளையோர்கள் என்னும் போது 18 தொடக்கம் 22 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என வரைவிலக்கனப்படுத்தும் பொருட்டு இளைய குற்றவாளிகள் (பயிற்சி பாடசாலைகள்) பற்றிய கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.