• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சாட்சிக் கட்டளைச்சட்டத்திற்கான திருத்தம்
- சாட்சிக் கட்டளைச் சட்டத்திலுள்ள சில சொற்கள் மற்றும் சொற்பிரயோகங்கள் தற்போது பயன்படுத்தப்படாமையினால் அவற்றுக்குப் பதிலாக புதிய சொற்களையும் சொற் பிரயோகங்களையும் இட்டு இந்த கட்டளைச் சட்டத்தை திருத்தும் பொருட்டு 2016 யூலை மாதம் 05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்குப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதோடு, குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.