• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெலிகம தென்னைஓலை வாடும் அத்துடன் அழுகும் நோயை தடுப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம்
- 'வெலிகம தென்னைஓலை வாடும் அத்துடன் அழுகும் நோய்' மாத்தறை மாவட்டத்தில் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 02 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காலி மாவட்டத்தில் 02 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பரவியுள்ளது. இந்த நோய் காரணமாக படிப்படியாக தேங்காய் விளைச்சலானது குறைவடைந்து தென்னை மரம் பட்டுப்போய் காலம் செல்லும் போது முழுமையாக அழிவடைவதோடு, நன்றாகவுள்ள மரங்களுக்கும் நோய் பரவுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ள நோய் முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் தற்போது நோய் காணப்படும் வலயத்திற்கு வௌியே நோய் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, நோய் காணப்படும் வலயத்திற்குள் நோயானது வெற்றிகரமாக முகாமிக்கப்பட்டு வருகின்றது. இதற்கிணங்க, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் 2021-2023 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.