• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடவுச் சீட்டுக்கள் மற்றும் அரசாங்கத்திற்குத் தேவையான இரகசிய ஆவணங்களை அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் ஊடாக அச்சிட்டு விநியோகித்தல்
- கடவுச் சீட்டுக்கள் மற்றும் அரசாங்கத்திற்குத் தேவையான இரகசிய ஆவணங்கள் தற்போது வௌிநாட்டு அச்சு நிறுவனங்களின் ஊடாக அச்சிடுவதன் காரணமாக நாட்டிலிருந்து வௌிச் செல்லும் அந்நியசெலாவணியை நாட்டிலேயே முடக்கி வைத்துக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் அத்தகைய ஆவணங்களை அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் ஊடாக அச்சிட்டுக் கொள்வதற்குத் தேவையான இயந்திர சாதனங்களை கொள்வனவு செய்வது சம்பந்தமாக வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பானது அமைச்சரவையினால் பரிசீலனை செய்யப்பட்டதுடன், இந்த கருத்திட்டம் சம்பந்தமாக விரிவான மதிப்பீடொன்றினைச் செய்வதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்கு கையளிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.