• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் பின்வரும் நோக்கங்கள் கருதி வௌியிடப்பட்டுள்ள நான்கு (04) வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* சுகாதார அமைச்சினதும் முப்படையினதும் COVID நிலையத்தினதும் கோரிக்கையின் பேரில் COVID - 19 தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான மருந்துகள், இரசாயன பொருட்கள், சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள், இயந்திரசாதனங்கள் போன்ற உற்பத்திகளை இறக்குமதி செய்யும் போது அல்லது இறக்குமதி செய்து வழங்கும் போது அல்லது இறக்குமதி செய்து நன்கொடையாக வழங்கும் போது செஸ் வரியிலிருந்து விலக்களித்தல்.

* போட்லண்ட் சீமெந்து இறக்குமதியின் போது ஏற்புடையதாகும் செஸ்வரி விகிதாசார அடிப்படையில் அறவிடுவதற்குப் பதிலாக அலகு என்னும் அடிப்படையில் அறவிடுதல்.

* Cement Clinker இறக்குமதி செய்யும் போது செஸ் வரியினை நீக்குதல்.

* காலணி உற்பத்திற்குத் தேவையான சில பகுதிகள், மின்குமிழ் இழை மற்றும் முறிவுறாமல் எளிதாக வளைக்கக்கூடிய பொதியிடல் பொருட்கள் என்பவற்றை இறக்குமதி செய்யும் போது செஸ் வரியினை விதித்தல்.