• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப் பாட்டுச்) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- COVID - 19 தொற்று காரணமாக அந்நிய செலாவணி விகிதாசாரத்திற்கு ஏற்பட்ட தாக்கத்தை குறைக்கும் நோக்கில் இறக்குமதியினை முறைப்படுத்துவதற்கும் பொருளாதார செயற்பாடுகளை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கும் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகள் 2020‑04‑01 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கும் புத்துயிரளிப்பதற்கும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் தீர்வை வரியினை நிர்ணயிக்கும் குழுவானது நியமிக்கப்பட்டதோடு, இந்தக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இடைக்கால நடவடிக்கையொன்றாக இறக்குமதியினை முறைப்படுத்துவதற்காக இறக்குமதி பொருட்களை மூன்று வகுதிக்குள் வகைப்படுத்தி பின்வருமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. * உள்நாட்டில் பயிர்செய்யக்கூடிய அல்லது உற்பத்தி செய்யக்கூடிய அத்தியாவசியமற்ற பொருட்கள், வர்த்தகப் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களின் இறக்குமதியினை தற்காலிகமாக இடைநிறுத்துதல். * வழங்குநர்களினால் வழங்கப்படும் கடன் வசதிகள் மீது அல்லது அந்நிய செலாவணி செலவாகாத அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்தல். * உள்நாட்டு கைத்தொழில், கமத்தொழில், ஏற்றுமதி பதனிடல் மற்றும் உள்நாட்டு நுகர்வு என்பவற்றுக்குத் தேவையான தெரிவுசெய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்தல். இதற்கமைவாக, மேற்போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை வௌியிட்டு பிரசுரிக்கப்பட்ட நான்கு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களையும் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.