• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021ஆம் ஆண்டு சார்பில் இலவசமாக விநியோகிப்பதற்குத் தேவைப்படும் பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுதல்
- 2021ஆம் ஆண்டு சார்பில் இலவசமாக விநியோகிப்பதற்குத் தேவைப்படும் 400 வகை பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடவேண்டியுள்ளதோடு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 106 வகைகளைக் கொண்ட பாடசாலை பாடப் புத்தகங்களின் 13,890,000 பிரதிகளை 1,093.71 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் மூலமும் மேலும் 294 வகை பாடசாலை பாடப்புத்தகங்களின் 25,541,500 பிரதிகளை 2,059.01 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு திறந்த போட்டிக் கேள்வி நடவடிக்கையின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தனியார் துறையைச் சேர்ந்த அச்சு நிறுவனங்களின் மூலமும் அச்சிடுவதற்கு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.