• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020/2021 பெரும் போகத்தில் தட்டுப்பாடின்றி பசளை விநியோகிப்பதற்கான துரித நிகழ்ச்சித்திட்டம்
- கடந்த காலப்பகுதியில் பசளை மானியக் கொள்கையை அடிக்கடி மாற்றியமை, பசளை இறக்குமதி செய்யும் கம்பனிகளுக்கு உரியவாறு பணம் செலுத்தாமை, தரமற்ற பசளை சந்தைக்கு கொண்டுவந்தமை போன்ற காரணங்களினால் விவசாயிகளுக்கு பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. ஆதலால், இந்த நிலைமையைத் தவிர்த்து 2020/2021 பெரும் போகத்திலிருந்து விவசாயிகளுக்கு பசளை வழங்கும் முறையினை உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்கு பின்வருமாறு நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

* நெல் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு இலவசமாக பசளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை தொடர்ந்தும் அவ்வாறே நடைமுறைப்படுத்து வதற்கும் சுற்றாடல் நட்புறவுமிக்க பசளைகளை நெல் பயிர் செய்யும் விவசாயிகளிடத்தில் பிரபல்யப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும்.

* 020/2021 பெரும்போகத்தில் நெல் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு தேவையான 230,000 மெற்றிக் தொன் பசளையினை அரசாங்க உர கம்பனிகளின் ஊடாக துரிதமாக இறக்குமதி செய்தல்.

* நெல் தவிர பிற பயிர்ச் செய்கைகளுக்காக 020/2021 பெரும்போகத்தில் 332,000 மெற்றிக் தொன் பசளை தேவையென்பதையும் இதன் பொருட்டு பசளை கம்பனிகளிடம் சுமார் 40,000 மெற்றிக் தொன் பசளை மாத்திரம் உள்ளதென்பதையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மேலும் தேவைப்படும் சுமார் 300,000 மெற்றிக் தொன் பசளையினை இறக்குமதி செய்வதற்கு உடன்பாடு தெரிவித்துள்ள பசளை கம்பனிகளுக்கு அனுமதியளித்தல்.

* தகைமை பெறும் வேறு கம்பனிகளுக்கும் 5,000 மெற்றிக் தொன் என்னும் உச்ச அளவின் கீழ் 2020/2021 பெரும்போகத்தில் பசளை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கும்.

* நெல் தவிர ஏனைய பயிச் செய்கைகளுக்குத் தேவையான பசளையினை 50 கிலோ கிராம் பொதியொன்று 1,500/- என்னும் சலுகை விலையில் திறந்த சந்தையில் பெற்றுக் கொள்ளவதற்கான வாய்ப்பினை விவசாயிகளுக்கு வழங்குதல்.

இதற்கிணங்க, மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி அமைச்சராக பிரதம அமைச்சரும் கமத்தொழில் அமைச்சரும் சமர்ப்பித்த கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.