• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020 ஆம் ஆண்டு சார்பில் Litro Gas Lanka Ltd. நிறுவனத்திற்கு வெற்று திரவ பெற்றோலிய வாயு உலோக சிலின்டர்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு Litro Gas Lanka Ltd. நிறுவனத்திற்கு வெற்று திரவ பெற்றோலிய வாயு உலோக சிலின்டர்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பின்வருமாறு வழங்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 2.3 கிலோ கிராம், 12.5 கிலோ கிராம் மற்றும் 37.5 கிலோ கிராம் ஆகிய வகைகளின் கீழ் முறையே 22,000, 105,056 மற்றும் 1,260 சிலின்டர்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை 2.18 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு M/s.Metal Mate Co. Ltd. நிறுவனத்திற்கும்.

* 5 கிலோ கிராம் வகையின் கீழ் 117,040 சிலின்டர்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை 1.58 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு Sahamitr Pressure Containers Public Co. Ltd. நிறுவனத்திற்கும்.