• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிராந்திய கைத்தொழில் பேட்டைகளிலிருந்து கைத்தொழில்களைத் தாபிப்பதற்காக காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்
– பிரதேச ரீதியாக கைத்தொழில்களை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்டு கைத்தொழில் அமைச்சினால் 'பிராந்திய கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்' நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. உரிய பிராந்திய கைத்தொழிற்சேவை குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இரத்மலானை, களுத்துறை, மில்லாவ, நாலந்த, உலப்பனை, மாகந்துர, ஊவாபரனகம மற்றும் மட்டக்களப்பு ஆகிய கைத்தொழில் பேட்டைகளில் கைத்தொழில்களை ஆரம்பிக்கும் பொருட்டு 09 முதலீட்டாளர்களுக்கு 35 வருட காலப்பகுதிக்கு குத்தகை அடிப்படையில் காணித் துண்டுகளை குறித்தொதுக்கும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.