• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய வர்த்தக கொள்கையினை வகுப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தல்
- அமைச்சரவையினால் 2017‑08‑01 ஆம் திகதியன்று அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய வர்த்தக கொள்கையினை வகுக்கும் போது உரிய முறையில் தொடர்புபட்ட சகல தரப்பினர்களுடனும் உசாவுதலைச் செய்து குறித்த கொள்கையானது தயாரிக்கப்படவில்லையென்பது அவதானிக்கப் பட்டுள்ளது. இதற்கிணங்க நடைமுறைக்கு ஏற்ற விதத்தில் புதிய தேசிய வர்த்தக கொள்கையினை வகுக்கும் பொருட்டு உரிய சகல தரப்பினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.