• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வருமானத்திற்கு ஏற்ற நடுத்தர வருமான வீட்டுத்திட்டத்திற்கு நிதியீட்டம் செய்வதற்கு மூலதனக் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கு தொகுதி கடன் பத்திரங்களை வழங்குதல்
– அரசாங்க மற்றும் தனியார் துறையில் சேவை புரியும் நடுத்தர வருமானம் பெறும் ஊழியர்களுக்கு அவர்களுடைய வருமானத்திற்கு ஏற்ற வீடுகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் வீடமைப்பு கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு 2020‑05‑027 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஆரம்ப மூலதனத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு 5 வருடகாலத்திற்கு செல்லுபடியாகும் 25 பில்லியன் ரூபாவைக் கொண்ட தொகுதி கடன் பத்திரங்களை வழங்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதேபோன்று கருத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வீடுகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தின் ஊடாக தொகுதி கடன்களை ஈடு செய்வதற்கும் குறித்த வீடுகளை கொள்வனவு செய்யும் பொருட்டு உரிய கொள்வனவாளர்களுக்கு 25 – 30 வருட காலப்பகுதிக்கு சலுகை வட்டி விகிதாசாரத்தின் கீழ் அரசாங்க வங்கிகளின் ஊடாக வீட்டுக் கடன்களை வழங்குவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.