• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-09-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முதலீட்டு ஊக்குவிப்பு பற்றிய அமைச்சரவை உபகுழுவை நியமித்தல்
- 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் வறுமையை இல்லாதொழித்து சகல தரப்புகளுக்கும் நலன்கள் கிடைக்கும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பதிலீட்டு உற்பத்தி பொருளாதாரத்திற்கு உள்நாட்டு, வௌிநாட்டு முதலீட்டு வசதிகளை விரிவுபடுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமை பணியாகும். இதன் பொருட்டு கொள்கை ரீதியிலானதும் நடைமுறை சார்ந்ததுமான தீர்வுகளை வழங்குவதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமையில் பின்வரும் அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய முதலீட்டு ஊக்குவிப்பு பற்றிய அமைச்சரவை உபகுழுவை நியமிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.* மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பிரதம அமைச்சர்; நிதி அமைச்சர்; நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்;

* மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கடற்றொழில் அமைச்சர்;

* மாண்புமிகு காமினி லொக்குகே அவர்கள், போக்குவரத்து அமைச்சர்;

* மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்கள், வர்த்தக அமைச்சர்;

* மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்கள், மின்சக்தி அமைச்சர்;

* மாண்புமிகு ஜொன்ஸ்ரன் பெர்னாண்டோ அவர்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சர்;

* மாண்புமிகு விமல் வீரவன்ச அவர்கள், கைத்தொழில் அமைச்சர்;

* மாண்புமிகு மஹிந்த அமரவீர அவர்கள், சுற்றாடல் அமைச்சர்;

* மாண்புமிகு எஸ்.எம்.சந்திரசேன அவர்கள், காணி அமைச்சர்;

* மாண்புமிகு வாசுதேவ நாணயக்கார அவர்கள், நீர்வழங்கல் அமைச்சர்;

* மாண்புமிகு உதய பிரபாத் கம்மன்பில அவர்கள், வலுசக்தி அமைச்சர்;

* மாண்புமிகு ரமேஷ் பத்திரன அவர்கள், பெருந்தோட்டத்துறை அமைச்சர்;

* மாண்புமிகு பிரசன்ன ரணதுங்க அவர்கள், சுற்றுலாத்துறை அமைச்சர்;

* மாண்புமிகு ரோஹித அபேகுணவர்தன அவர்கள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்;

* மாண்புமிகு அலி சப்ரி அவர்கள், நீதி அமைச்சர். அதேபோன்று இந்த அமைச்சரவை உபகுழுவின் கலந்துரையாடல்களின்போது பின்வரும் இராஜாங்க அமைச்சர்களின் பங்களிப்பினை பெற்றுக் கொள்வதற்கும்கூட அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* மாண்புமிகு துமிந்த திசாநாயக்க அவர்கள், சூரியசக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்;

* மாண்புமிகு ஜயந்த சமரவீர அவர்கள், களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்;

* மாண்புமிகு திலும் அமுணுகம அவர்கள், வாகன ஒழுங்குறுத்துகை பேருந்து போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்;;;

* மாண்புமிகு டி.வீ.சானக்க அவர்கள், விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்;

* மாண்புமிகு நாலக கொடஹேவா அவர்கள், நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை மற்றும் சமூக துப்பரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்;

* மாண்புமிகு அஜித் நிவாட் கப்ரால் அவர்கள், நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்.