• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-08-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதியன்று தேசிய மின்சார முறைமையின் ஏற்பட்ட முழுமையான மின்சார செயலிழப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கை
- 2020 ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதியன்று ஏற்பட்ட முழுமையான மின்சார செயலிழப்பு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. கையாள்கை மற்றும் பராமரிப்பு அனர்த்த முகாமைத்துவ வழிமுறையொன்று தற்போது நடைமுறையில் இல்லையென்பது இந்தக் குழுவினால் இனங்காணப் பட்டுள்ளதோடு, அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு நம்பத் தகுந்த கையாள்கை மற்றும் பராமரிப்பு வழிமுறையொன்று இருக்கவேண்டிய தேவை அடங்கலாக மேலும் 11 சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 2020‑08‑17 ஆம் திகதியன்று நாடுமுழுவதும் மின்சார செயலிழப்பானது அச்சந்தர்ப்பத்தில் கெரவலபிட்டிய கிரிட் துணை நிலையத்தில் வழமையான பராமரிப்பு பணியொன்றில் பொறுப்பாகவிருந்த உத்தியோகத்தர் ஒருவரின் தவறால் நிகழ்ந்துள்ள தென்பதுவும் குழுவினால் அறிக்கையிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேற்போந்த குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பற்றி மேலும் ஆழமாக ஆராயப்பட்டு வருகின்றதெனவும், எதிர்காலத்தில் இந்த ஆய்வுகளின் மூலம் சிபாரிசு செய்யப்படும் நடவடிக்கைகள் மற்றும் இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான முதலீடுகள் தொடர்பிலான மதிப்பீடுகளுடன் அமைச்சரவைக்கு அறியச் செய்வதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.