• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-08-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரிச் சட்டங்களைத் திருத்துதல் - பொருளாதார மறுமலர்ச்சிக்கான கொள்கை நடவடிக்கைகள்
- அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக நுகர்வோர், தொழிலாளர், தொழில்முயற்சியாளர், மற்றும் வரி செலுத்தும் சமூகம் உள்ளடக்கப்பட்ட சகல தரப்பினர்களுக்கும் ஏற்ற வகையில் எளிமையானதும் வௌிப்படைத் தன்மை வாய்ந்ததும் வினைத்திறன் மிக்கதுமான வரி முறையொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு 2019 நவம்பர் மாதம் 27 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் தொழிலுக்கு அமர்த்தல் என்பன COVID - 19 தொற்று காரணமாக எழுந்துள்ள பாதகமான தாக்கங்களை குறைப்பதற்காக குறைந்த வருமானம் பெறுபவர்கள் தொழில்முயற்சியாளர்கள், நுண், சிறிய மற்றும் தடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள், சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் விவசாயிகள் போன்ற பொருளாதாரத்தின் சகல தரப்பினர்களுக்கும் அரசாங்க நிதி மற்றும் நிதி ஊக்குவிப்புகளை வழங்குவதற்கும் அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்முயற்சியாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நிதிப் பொறுப்புக்களை இலகுபடுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் நிதிச் சந்தையில் திரவத்தன்மையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் காரணமாக 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது பகுதியில் பொருளாதாரம் மீளப் பழைய நிலைக்கு வருமென எதிர்பார்க்கப்படுவதோடு, அதற்கமைவாக பின்வரும் சட்டங்களைத் திருத்தும் பொருட்டு சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலங்களை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்து அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிபதற்காக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி சட்டம்;

* 2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, பொருளாதார சேவைக் கட்டண சட்டம்;

* 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு சட்டம்;

* 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதி சட்டம்;

அத்துடன், பின்வரும் சட்டங்களைத் திருத்துவதற்குத் தேவையான வரைவுச் சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கும்கூட அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது

* 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டம்;

* 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டம்;