• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-08-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரசாயன பசளை கொள்வனவு - 2020 பெரும்போகம் (ஒக்ரோபர் முற்பகுதிக்கான விநியோகம்)
- வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பனி மற்றும் Colombo Commercial Fertilizers Ltd., நிறுவனம் என்பன 2020 பெரும்போகத்தில் ஒப்றோபர் மாதத்தில் விநியோகிக்கப்படவுள்ள இரசாயன பசளையினை இறக்குமதி செய்வதற்கு திறந்த போட்டி விலை கோரியுள்ளன. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பின்வருமாறு கேள்வியினை கையளிக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பனி மற்றும் Colombo Commercial Fertilizers Ltd., நிறுவனம் என்பன சார்பில் 20,000 +5% மெற்றிக் தொன் Murate of Potash, மெற்றிக் தொன் ஒன்று 236.44 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் M/s. Valency International Trading Pvt. Ltd. நிறுவனத்திடமிருந்தும்.

* Colombo Commercial Fertilizers Ltd., சார்பில் 2,000 +5% மெற்றிக் தொன் Murate of Potash, மெற்றிக் தொன் ஒன்று 236.44 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் M/s. Valency International Trading Pvt. Ltd. நிறுவனத்திடமிருந்தும்.

அத்துடன், கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையின் சிபாரிசின் பிரகாரம் 2020 பெரும்போகத்தில் செப்ரெம்பர் மாதத்திற்குரியதாக வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பனி மற்றும் Colombo Commercial Fertilizers Ltd., நிறுவனம் என்பன சார்பில் 8,700 +5% மெற்றிக் தொன் Triple Super Phosphate, மெற்றிக் தொன் ஒன்று 241.00 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் கொள்வனவு செய்வதற்காக M/s. Gulf Fert International FZE நிறுவனத்திற்கு கையளிக்கும் பிரேரிப்புக்கும்கூட அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.