• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-08-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- பின்வரும் சட்டங்களிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

(i) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் வௌிப்படுத்தப்பட்ட 06 வர்த்தமானி அறிவித்தல்கள்.

(ii) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வௌிப்படுத்தப்பட்ட 09 வர்த்தமானி அறிவித்தல்கள்.

(iii) மதுவரி கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 52) கீழ் வௌிப்படுத்தப்பட்ட 10 வர்த்தமானி அறிவித்தல்கள்.

(iv) 2006 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் கீழ் வௌிப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று

(v) 2012 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் கீழ் வௌிப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று.

(vi) 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் கீழ் வௌிப்படுத்தப்பட்ட 05 வர்த்தமானி அறிவித்தல்கள்.

(vii) 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, அரசிறை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வௌிப்படுத்தப்பட்ட 06 வர்த்தமானி அறிவித்தல்கள்.

(viii) சுங்க கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 235) கீழ் வௌிப்படுத்தப்பட்ட 03 வர்த்தமானி அறிவித்தல்கள்.

(ix) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் வௌிப்படுத்தப்பட்ட 31 வர்த்தமானி அறிவித்தல்கள்.

(x) 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, அந்நிய செலாவணிச் சட்டத்தின் கீழ் வௌிப்படுத்தப்பட்ட 05 வர்த்தமானி அறிவித்தல்கள்.