• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-08-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதி அமைச்சினால் வௌிப்படுத்தப்பட்டுள்ள அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- பின்வரும் அறிக்கைகள் நிதி அமைச்சினால் வௌிப்படுத்தப்பட்டுள்ளதோடு, இந்த அறிக்கைகளை பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

i. தேர்தலுக்கு முன்னரான வரவுசெலவுத்திட்ட நிலைமை பற்றிய அறிக்கை

2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, அரசாங்க நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தின் 16(2) ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நடாத்தி 02 வார காலப்பகுதிக்குள் நிதி அமைச்சரினால் தேர்தலுக்கு முன்னரான வரவுசெலவுத்திட்ட நிலைமை பற்றிய அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.

ii. நிதி அமைச்சின் ஆண்டறிக்கை - 2019

2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, அரசாங்க நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தின் 13 ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் நிதி ஆண்டு முடிவடைந்ததன் பின்னர் ஐந்து (05) மாதங்கள் கடப்பதற்கு முன்னர் இறுதி வரவுசெலவுத்திட்ட நிலைமை பற்றிய அறிக்கையானது நிதி அமைச்சரினால் பொதுமக்களுக்கு வௌிப்படுத்த வேண்டு மென்பதோடு, அதன்பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.

iii. அரையாண்டு அரசிறை நிலைமை பற்றிய அறிக்கை - 2020

2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, அரசாங்க நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தின் 10 ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் அரையாண்டு அரசிறை நிலைமை பற்றிய அறிக்கையானது ஒவ்வொரு நிதி ஆண்டிலும் யூன் மாதம் இறுதி தினத்திற்கு முன்னர் நிதி அமைச்சரினால் பொதுமக்களுக்கு வௌிப்படுத்த வேண்டுமென்பதோடு, அதன்பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.

iv இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை - 2019

நிதிச் சட்டத்தின் 35 ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் பொருளாதார நிலைமை, இலங்கை மத்திய வங்கியின் நிலைமை மற்றும் ஆண்டினுள் நிதிச் சபையினால் பின்பற்றப்பட்ட கொள்கை மற்றும் நடவடிக்கைகள் என்பன உள்ளடக்கப்பட்ட அறிக்கையினை அடுத்த ஆண்டு ஆரம்பித்து நான்கு (04) மாதங்களினுள் நிதி அமைச்சருக்கு சமர்ப்பிக்க வேண்டுமென்பதோடு, அதன் பின்னர் குறித்த அறிக்கையானது பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.