• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-08-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவை நியமித்தல்
- சந்தைக் கேள்வி மற்றும் வழங்கல் என்பவற்றின் ஏற்றத்தாழ்வு, காலநிலை தாக்கங்கள், காலத்துக்கு காலம் உற்பத்தியாளர்களினால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், சருவதேச சந்தை விலைகள் போன்ற விடயங்கள் சம்பந்தமாக கவனம் செலுத்தி வாழ்க்கைச் செலவினை நிலையாக பேணுவதற்குத் தேவையான கொள்கை மற்றும் நடைமுறைத் தீர்வுகளை வழங்குவதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமையில் மாண்புமிகு பிரதம அமைச்சர், வர்த்த அமைச்சர், கமத்தொழில் அமைச்சர், கடற்றொழில் அமைச்சர் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஆகியோர்களைக் கொண்ட வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவை நியமிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதேபோன்று இந்த அமைச்சரவை உபகுழுவின் கலந்துரையாடல்களின்போது பின்வரும் இராஜாங்க அமைச்சர்களின் பங்களிப்பினை பெற்றுக் கொள்வதற்கும்கூட அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழினுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்.

* கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.

* தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர்.