• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுத்துறை பொது வைத்தியசாலையையும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையையும் போதனா வைத்தியசாலைகளாக தரமுயர்த்துதல்
- மொறட்டுவை பல்கலைக்கழத்தில் மருத்துவ பீடமொன்றைத் தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகின்றதோடு, அதன் கற்கை பணிகளை துரிதமாக ஆரம்பிக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது. உத்தேச மருத்துவ பீடத்தின் பேராசிரியர் பீடத்தை களுத்துறை பொது வைத்தியசாலையில் தாபிப்பதற்கு இயலுமாகும் வகையிலும் உரிய மருத்துவ பயிற்சியினை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் வழங்குவதற்கு இயலுமாகும் வகையிலும் களுத்துறை பொது வைத்தியசாலையையும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையையும் போதனா வைத்தியசாலைகளா தரமுயர்த்துவதற்கு சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.