• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020/2021 ஆம் ஆண்டுக்காக வேலைநிறுத்தம், கலவரம், மக்கள் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத நிதியம் தொடர்பிலான மீள் காப்புறுதி காப்பீட்டிற்கான பெறுகை
- தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியம் இலங்கையில் பொது காப்புறுதி கம்பனிகளுக்கு வேலைநிறுத்தம், கலவரம், மக்கள் கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத நிதியம் தொடர்பிலான காப்புறுதி காப்பீடுகளை வழங்குகின்றதோடு, இந்த காப்புறுதி காப்பீடுகளின் பொருட்டு மீள் காப்புறுதி காப்பீட்டினை அங்கீகரிக்கப்பட்ட மீள் காப்புறுதியாளர்களிடமிருந்து / மீள் காப்புறுதி முகவர்களிடமிருந்து தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியம் பெற்றுக் கொள்கின்றது. இதற்கிணங்க, 2020/2021 ஆம் ஆண்டுக்காக குறித்த மீள் காப்புறுதி காப்பீட்டினைப் பெற்றுக் கொள்வதற்கு சருவதேச ரீதியில் போட்டிகரமான கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தம் வழங்கப்பட்ட திகதியிலிருந்து 18 மாத காலப்பகுதிக்கு மீள் காப்புறுதி காப்பீட்டிற்காக 116.39 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் M/s.J.B.Boda & Co (S) Pte. Ltd., (பிரதான மீள் காப்புறுதியாளர் - M/s. Chaucer Syndicate 1084) நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.