• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேல் கொத்மலை நீர்மின் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது வழங்கப்பட்ட மீள் குடியேற்ற வீடுகளுடனான காணிகளுக்கு கொடைப் பத்திரங்களை வழங்குதல்
- மேல் கொத்மலை நீர்மின் கருத்திட்டம் 2006 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் அதன் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. இந்தக் கருத்திட்டம் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடுகள், கடைகள் மற்றும் வேலைத்தளங்கள் என்பவற்றிற்கான மாற்று இடங்கள் நிர்மாணிக்கப்பட்டு 2014 ஆகஸ்ட் மாதம் அளவில் இவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதோடு, உரிய நட்டஈடு கொடுப்பனவு நடவடிக்கைகளும் தற்போது முடிவுறுத்தப்பட்டுள்ளது. ஆயினும் மீளக் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளின் உரிமை இதுவரை வழங்கப்படவில்லை. ஆதலால், மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டதன் காரணமாக இடம் பெயர்ந்தவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் மற்றும் கட்டடங்களை நிர்மாணிப்பத்றகாகவும் பயிற்செய்கை நோக்கங்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ள மாற்று காணிகளை உரிய பயனாளிகளுக்கு இறையிலி கொடைப்பத்திரத்தின் மூலம் உடைமையாக்கும் பொருட்டு மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.