• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட கிழக்கு ஹேவாகம் கோரளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் காரணமாக வைப்பாளர்கள் இழந்த பணத் தொகையினை செலுத்துவதற்கு வழிமுறையொன்றை தயாரித்த
- 2015 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து சந்தர்ப்பங்களில் வரையறுக்கப்பட்ட கிழக்கு ஹேவாகம் கோரளை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் 507.59 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையினை இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட முதல்நிலை கொள்வனவு கம்பனியொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிறுவமொன்றின் ஊடாக திறைசேரி உண்டியல்களில் முதலீடு செய்துள்ளது. ஆயினும், இந்த நிறுவனம் இலங்கை மத்திய வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட முதல்நிலை கொள்வனவு கம்பனியொன்றல்ல என்பது பின்னர் தெரியவந்துள்ளதோடு, இதுவரை குறித்த தொகையினை அறவிடமுடியாமற் போயுள்ளதன் காரணமாக இந்த கூட்டுறவுச் சங்கத்தின் வைப்பாளர்களுக்கு பாரிய அநீதி நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களை இனங்காண்பதற்கும் வைப்பாளர்களுக்கு நீதியினை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளைச் சிபாரிசு செய்வதற்கும் உரிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதற்காக உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலனோம்புகை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.