• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாடளாவிய ரீதியில் உயிரியல் படலம், உயிர் பசளை பாவனையை மேம்படுத்துதல்
- தேசிய அடிப்படை கல்வி நிறுவனத்தின் வழிநடத்தலின் கீழ் உயிரியல் படலம், உயிர் பசளை பாவனை தொடர்பில் 2018 ஆம் ஆண்டில் முன்னோடிக் கருத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டதோடு, அதன் கீழ் அம்பாந்தோட்டை, பொலன்நறுவை, குருநாகல், அம்பாறை மற்றும் மஹியங்கனை ஆகிய பிரதேசங்களில் 3,500 ஏக்கர் நெற்செய்கைக்காக குறித்த பசளையானது அறிமுகப்படுத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் இந்த அளவானது 4,000 ஏக்கர் வரை அதிகரிக்கப்பட்டதோடு, இதன் மூலம் கிடைக்கப் பெற்ற சாதகமான பெறுபேற்றின் மீது 2020 சிறுபோகத்தில் முக்கியமாக குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 15,000 ஏக்கர் நெற்செய்கைக்காக இந்தப் பசளையானது பயன்படுத்தப்பட்டது. அடுத்து வரும் ஆண்டில் இந்தப் பசளை பயன்படுத்தப்பட்டிருந்தது. நெற்செய்கை நிலப்பிரதேசத்தை 120,000 ஏக்கர் வரை அதிகரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, கமத்தொழில் திணைக்களத்துடன் இணைந்து முறையான வழிமுறையொன்றின் கீழ் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.