• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 தொற்று நோயை தடுக்கும் முயற்சிக்கென கைத்தொழில் தொழினுட்ப நிறுவனத்தினால் விருத்தி செய்யப்பட்ட புத்தாக்க உற்பத்திகளின் ஏற்றுமதி மற்றும் சந்தைப்படுத்தல்
- COVID - 19 தொற்று நோயை தடுக்கும் முயற்சிக்கென கைத்தொழில் தொழினுட்ப நிறுவனத்தினால் விருத்தி செய்யப்பட்ட புத்தாக்க உற்பத்திகளை இலங்கை ஆயுள்வேத மருந்துப் பொருள் கூட்டுத்தாபனத்தின் ஊடாக உற்பத்தி செய்து கொள்வதற்கும் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் மற்றும் பொருத்தமான அரசாங்க முகவர் நிறுவனங்கள் என்பவற்றின் விற்பனை நிலையங்கள் ஊடாக இந்த உற்பத்திகளை விநியோகிப்பதற்கும் உள்ள சாத்தியம் பற்றி ஆராய வேண்டுமென 2020 ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிணங்க, கைகளை சுத்தப்படுத்தும் மதுசாரம் அடங்கிய மூலிகை வகை ஜெல் மற்றும் திரவம் போன்ற உற்பத்திகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் உட்பட உற்பத்தி முறைகள் கைத்தொழில் தொழினுட்ப நிறுவனத்தினால் உடன்பாட்டு ஒப்பந்தத்தின் மீது ஆயுள்வேத கூட்டுத்தாபனத்திற்கு வழங்கி இந்த நிறுவனத்தினால் குறித்த உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரு தரப்பினர்களுக்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்கள் ஊடாக உரிய உற்பத்திகளை விநியோகிப்பதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.