• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக செயற்படுத்தப்பட்டுள்ள அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் கீழான நலன்களை மேலும் விரிவுப்படுத்துதல்
- 2016 சனவரி மாதம் 01 ஆம் திகதியன்றின் பின்னர் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களுக்கு அக்ரஹார காப்புறுதி திட்டத்தில் இணைந்து அதன் நலன்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் இளைப்பாறியவர்களில் பெரும்பாலானோர் 2016 சனவரி மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்க சேவையிலிருந்து இளைப்பாறியவர்களாவதோடு, அவர்களுக்கும் அக்ரஹார காப்புறுதி திட்டத்தில் இணைவதற்கு வாய்ப்பு வழங்குமாறு இளைப்பாறிய உத்தியோகத்தர்களின் சங்கங்களினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, தற்போது 2016 சனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் உரியதாகவிருந்த அக்ரஹார நலன்களை குறித்த திகதிக்கு முன்னர் இளைப்பாறிய அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் வழங்குவது சம்பந்தமாக திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரினாலும் பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் தெரிவிக்கப்பட்ட உடன்பாட்டினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதேபோன்று நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பின்வருமாறு நடவடிக்கை எடுக்கும் பொருட்டும்கூட அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் கீழ் அரசாங்க உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இளைப்பாறிய உத்தியோககத்தர்களுக்கும் நலன்களைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் தரம்மிக்க உயர் சுகாதார சேவை வசதிகளை செய்யும் பொருட்டு சகல மாவட்டங்களையும் தழுவும் விதத்தில் அரசாங்கத்தின் பிரதான வைத்தியசாலைகள் அனைத்திலும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் இளைப்பாறிய உத்தியோகத்தர்களுக்கும் காவறையொன்றை பேணுவதற்கு பொருத்தமான வழிமுறையொன்றைத் தயாரித்தல்.

* அரசாங்க சேவையிலிருந்து இளைப்பாறிய உத்தியோகத்தர்களுக்கிடையே ஓய்வூதிய முரண்பாடுகள் தொடர்ந்தும் நிலவுகின்றமை அவதானிக்கப் பட்டமையினால் குறித்த முரண்பாடுகளைச் சீர்செய்வதற்கு பொருத்தமான சிபாரிசுகளைச் சமர்ப்பிக்குமாறு தேசிய சம்பளங்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தல்.