• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ஆகிய நகரங்களை அழகுபடுத்தல் மற்றும் நிலத்தோற்ற அபிவிருத்தி தொடர்புபட்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- பிரதேசத்திற்கே உரிய பசுமைச் சூழலை விருத்தி செய்யும் மற்றும் உல்லாசப் பயணிகளுக்கும் உள்ளூர் பொதுமக்களுக்கும் சுற்றாடல் மற்றும் சமூக ரீதியிலான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நோக்கில் கொழும்பு மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ஆகிய நகரங்களை அழகுபடுத்தல் மற்றும் நிலத்தோற்ற அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையானது திட்டமிட்டுள்ளது.

i. காலிமுகத்திடல் சுற்றுப்புறத்தில் பசுமை உட்கட்டமைப்பு வசதிகள் வலையமைப்புத் திட்டம்.

ii. கொழும்பு - 01, பாலதக்‌ஷ மாவத்தையில் அமைந்துள்ள பாதசாரி வசதிகள் நிலையம்.

iii. தலபத்பிட்டிய, கிம்புலாவல நகர கமத்தொழில் பூங்கா.

இந்த கருத்திட்டங்களை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.