• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறன் விருத்தி தசாப்தம் 2021-2030
- சமாதானமானதும் நியாயமானதுமான சமூகமொன்றை உருவாக்குவதற்கு நிலைபேறுடைய அபிவிருத்தி முயற்சியில் செயற்பாட்டு மிக்க முன்னோடிகளாக இளைஞர் சமூகத்தை பங்குபெறச் செய்வித்தல் இதன் பொருட்டு அவர்களுடைய அறிவு திறமை மற்றும் ஆற்றலை விருத்தி செய்தல் அத்தியாவசியமானதாகும். எதிர்கால சந்ததியினரின் ஆற்றல்களை அபிவிருத்தி செய்வதற்கு 'சுபீட்சத்தின் நோக்கு' தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சிநிரலின் மூலமும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நாட்டின் திறனற்ற ஊழிய சனத்தொகையை 10 சதவீதமாக குறைத்து இலங்கையை ஆசியாவில் மனிதவள அபிவிருத்திக்கான மையமாக நிலைமாற்றுவதற்கு இந்த நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சிநிரலை செய்றபடுத்தும் எதிர்காலத்துடன் பொருந்தும் பிரசைகளை உருவாக்குவதற்கு பொதுக் கல்வி, உயர் கல்வி, வாழ்க்கைத் தொழிற்கல்வி மற்றும் நிபுணத்துவக் கல்வி போன்ற துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் 2021-2030 வரையான காலப்பகுதியை இலங்கையின் 'திறன் விருத்தி தசாப்தம்' ஆக பிரகடனப்படுத்துவதற்கென அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.