• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை உயிரியல் தொழினுட்ப புத்தாக்க பூங்கா
- அதிதொழினுட்ப ஏற்றுமதியினை மேம்படுத்துவதற்கும் அத்தகைய இறக்கு மதிகளுக்கான பதிலீட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் இலங்கை உயிரியல் தொழினுட்ப புத்தாக்க பூங்கா மற்றும் உயிரியல் தொழினுட்ப நிறுவனம் என்பவற்றை தாபிக்கும் கருத்திட்டத்தை கட்டம் கட்டமாக நடை முறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உயிரியல் தொழினுட்ப கம்பனிகள் மற்றும் உயிரியல் தொழினுட்ப ஆராய்ச்சியாளர்கள் அவர்களுடைய நோக்கங் களை வர்த்தக உற்பத்திகளாக மாற்றும் பொருட்டு இணைந்து செயலாற்று வதற்குத் தேவையான சாதகமான சூழலொன்றை உருவாக்குவதற்கு தேவை யான வசதிகளை ஏற்பாடு செய்வது இந்தக் கருத்திட்டத்தின் நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணை நிறுவனமொன்றான சருவதேச மரபியல் பொறியியல் மற்றும் உயிரியல் தொழினுட்ப நிலையமானது உத்தேச இலங்கை உயிரியல் தொழினுட்ப புத்தாக்க பூங்காக நிறுவனத்துடன் ஒத்துழைப்பு நல்கி செயற்படுவதற்கு இந்த அமைப்பின் தெற்காசிய வலயத்தின் வலய ஆராய்ச்சி நிலையமாக இலங்கையை தெரிவு செய்துள்ளது. இதன் மூலம் இன்சியூலின் மற்றும் ஹோமோன்கள் அடங்கலாக பத்து உயிரியல் பொருட் களை உற்பத்தி செய்யும் தொழினுட்பத்தை இந்த நிறுவனம் உடனடியாக கையளிப்பதற்கு உடன் பாடு தெரிவித்துள்ளதோடு, இது இலங்கைக்கு சாதகமான நிலைமையாகும்.

இதற்கிணங்க, ஹோமாகம, பிட்டிபன, அரமவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள 13.2 ஏக்கரில் உயிரியல் தொழினுட்ப புத்தாக்க பூங்காவினைத் தாபிப்பதற்கும் Biotechno Plex கட்டடத்தை நிர்மாணிப்பதற்கும் இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு திறைசேரிச் செயலாளரினதும் உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளரினதும் இணை தலைமையில் கையாள்கை குழுவொன்றையும் உரிய துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்ட தொழினுட்பக் குழுவொன்றையும் நியமிப்பதற்கும் கருத்திட்டத்திற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை ஏற்பாடு செய்வதற்கும் உரியதாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினாலும் உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.