• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழிற் சந்தையினை குறியிலக்காகக் கொண்ட உயர் தொழினுட்ப பல்கலைக்கழகங்களைத் தாபிப்பதற்கு சாத்தியத்தகவாய்வினை மேற்கொள்தல்
- சுபீட்சத்தின் நோக்கு அபிவிருத்தி கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தகவல் தொழினுட்பம், பொறியியல் தொழினுட்பம் மற்றும் உயிரியல் தொழினுட்பம் போன்றவற்றுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதனை குறியியலக்காகக் கொண்டு பத்து (10) மாவட்ட உயர் தொழினுட்ப பல்கலைக்கழகங்களைத் தாபிப்பதற்குரிய சாத்தியத்தகவாய்வினை மேற்கொள்வதற்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, நுவரெலியாக, களுத்துறை, அம்பாந்தோட்டை, மாத்தளை, புத்தளம், மன்னார், முல்லைத்தீவு, காலி, பொலன்நறுவை மற்றும் கேகாலை ஆகிய 10 மாவட்டங்கள் சார்ந்து ஆரம்ப சாத்தியத்தகவாய்வு செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.