• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு கைத்தொழில்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக பெறுகை வழிகாட்டல்களைத் திருத்துதல்
- அரசாங்க பெறுகை வழிகாட்டலில் உள்நாடு தொடர்பிலான முன்னுரிமை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், குறித்த ஏற்பாடுகளின் மூலம் உள்நாட்டு வழங்குநர்களுக்கும் அதே போன்று கம்பனிகளுக்கும் நலன்களைப் பெற்றுக் கொள்வதில் வரையறைகள் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. COVID - 19 தொற்று நிலைமையின் கீழ் உள்நாட்டுக் கம்பனிகளும் தொழில்முயற்சி யாளர்களும் அவர்களுடைய வர்த்தக நடவடிக்கைகளின் பொருட்டு அரசாங்கத்தின் ஒத்துழைப்பினை கூடுதலாக எதிர்பார்க்கின்றனர். இந்த விடயத்தினையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, தொழில்வாய்ப் புக்களை உருவாக்கி அதிகம் பெறுமதிசேர்க்கக்கூடிய உள்நாட்டு கைத்தொழில்களாக இனங்காணப்பட்டுள்ள தளபாடங்கள், உபகரணங்கள், மென்பொருள், வன்பொருள் மற்றும் நிர்மாணிப்பு ஆகிய துறைகளுக்கு பின்வருமாறு உள்நாடு தொடர்பிலான முன்னுரிமை வழங்குவது பொருத்தமான தென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, அரசாங்க நிறுவனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக் கொள்ளும் போது ஆகக்குறைந்தது 51 சதவீத உரிமையினை இலங்கை பிரசையொருவர் கொண்டுள்ள கம்பனிகளை உள்ளூர் கம்பனிகளாக இனங்கண்டு ஐந்து (05) வருட காலப்பகுதிக்கு உள்நாட்டு முன்னுரிமை வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

i. உள்ளூர் பெறுமதிசேர்த்தலானது ஆகக்குறைந்தது 50 சதவீதமாகவுள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து மாத்திரம் அலுவலக தளபாடங்கள் மற்றும் உபகரண தேவைகளை கொள்வனவு செய்தல் .

ii. மென்பொருள் தேவைகள் அனைத்தும் உள்ளூர் கம்பனிகளிடமிருந்து மாத்திரம் கொள்வனவு செய்வதற்கும் இதற்கிணங்க, செயலாற்றுவதற்கு இயலாமற்போகுமாயின் இலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப முகவராண்மையினதும் பொதுத் திறைசேரியினதும் அங்கீகாரத்துடன் மாத்திரம் இத்தகைய கொள்வனவுகளை உள்ளூர் கம்பனிகள் அல்லாத நிறுவனங்களிடமிருந்து மேற்கொள்தல்.

iii. அரசாங்க நிறுவனங்களுக்குத் தேவையான கணனி வன்பொருட்களுக்குரிய தகவு திறன்கள் இலங்கை தகவல், தொடர்பாடல் தொழிநுட்ப முகவராண்மையினால் தயாரிக்கப்படுவதோடு, ஏதேனும் நிறுவனமொன்று 50 சதவீதம் உள்ளூர் பெறுமதியினை சேர்க்குமாயின் பெறுகை மதிப்பீட்டு செயற்பாட்டின்போது குறித்த நிறுவனத்திற்கு 30சத வீத முன்னுரிமையினை வழங்குதல்.

iv. வீடுகள், வீதிகள், நீர்ப்பாசனம், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு முறைமைகள் அடங்கலாக சகல நிர்மாணிப்பு பணிகளும் உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படவேண்டுமென்பதோடு, வௌிநாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு துணை ஒப்பந்தங்கள் வழங்கப்படுமாயின் குறித்த ஒப்பந்தங்களின் பெறுமதியானது தற்காலிக நிதியற்ற ஒப்பந்த பெறுமதியின் 10 சதவீதத்தினை விஞ்ஞாசதிருத்தல்.

v. மேற்கறிப்பிட்டவாறு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தேசிய பெறுகை ஆணைக்குழுவுடன் உசாவுதலைச் செய்து திருத்தப்பட்ட பெறுகை வழிகாட்டல்களை வௌியிடுதல்.