• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நடைமுறையிலுள்ள பெற்றோல் (92 Unl) நீண்டகால ஒப்பந்தத்தின் கப்பல் தொகையிலிருந்து மேலதிகமாக 50 சதவீதத்தை கொள்வனவு செய்தல்
- 2020 சனவரி மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 2020 ஒக்றோபர் மாதம் 11 ஆம் திகதி வரையிலான ஒன்பது (09) மாத காலப்பகுதிக்குள் 1,800,000 பெரல் (1.8 மில்லியன்) பெற்றோல் (92 Unl) கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம் சிங்கப்பூர் M/s.Vitol Asia Pte. Ltd நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு பெறுகை வழிகாட்டல் 3.6 இல் உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் மீள் கட்டளையொன்றாக இந்தக் கேள்வியிலிருந்து 50 சதவீதத்திற்கு சமமான அளவினை நடைமுறையிலுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் மீதே கொள்வனவு செய்யும் பொருட்டு மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.