• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரசாயனப் பசளைக் கொள்வனவு - 2020 பெரும்போகம் (ஆகஸ்ட் மாத விநியோகம்)
- 2020 ஆகஸ்ட் மாத தேவைகளுக்காக வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பனி மற்றும் Colombo Commercial Fertilizers Company Ltd., நிறுவனம் என்பன பசளை கொள்வனவின் பொருட்டு சருவதேச ரீதியில் போட்டி விலை கோரியுள்ளன. இந்த விலைகள் சம்பந்தமாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் செய்யப்பட்டுள்ள சிபாரிசினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பின்வருமாறு பசளை கொள்வனவினை கையளிக்கும் பொருட்டு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் தழுவு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 60,000 மெற்றிக் தொன் யூரியாவை (Granular) + 5% மெற்றிக் தொன் ஒன்று 241.90 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் M/s ......... International Trading Pvt. Ltd. நிறுவனத்திடமிருந்தும்

* 15,000 மெற்றிக் தொன் Triple Super Phosphate + 5% மெற்றிக் தொன் ஒன்று 239.00 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் M/s Swiss Singapore Overseas Enterprises Ltd., நிறுவனத்திடமிருந்தும்