• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்மலானை வாழ்க்கைத்தொழில் தொழிநுட்பவியல் பல்கலைக்கழ கத்திற்கு ஒரு விடுதி, வேலைப்பட்டறை மற்றும் சிற்றுண்டிச்சாலை என்பவற்றை நிர்மாணித்தல்
- 927.34 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்ட செலவின் கீழ் இரத்மலானை வாழ்க்கைத்தொழில் தொழிநுட்பவியல் பல்கலைக்கழகத்திற்கு ஒரு விடுதி, வேலைப்பட்டறை மற்றும் சிற்றுண்டிச்சாலை என்பன பொருட்டு வெவ்வேறான மூன்று கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக 2017 சனவரி மாதம் 03 ஆம் திகதியன்று அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்த கட்டடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ள காணி வேரஸ்ஸ கங்கைக்கு மிக அண்மையிலுள்ள சதுப்பு நிலமாக காணப்படுவதனால் எதிர்கால தேவைகளின் பொருட்டு இதனை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் தேவை உட்பட, மூன்று கட்டடங்கள் சார்பிலும் வெவ்வேறாக நிலக்கால் இடல் செய்யவேண்டிய தேவை போன்ற விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, ஆரம்ப மதிப்பீட்டு எல்லைக்குள்ளேயே மூன்று கட்டடங்களுக்குப் பதிலாக ஆறு மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.