• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பவியல் பீடத்திற்காக உத்தேச கட்டட தொகுதியின் (கட்டம் - 2) நிர்மாணத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
- இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பவியல் பீடத்திற்காக உத்தேச கட்டட தொகுதியை (கட்டம் - 2) நிர்மாணத்திற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 1,560.36 மில்லியன் ரூபாவைக் கொண்ட (வற் வரியின்றி) தொகைக்கு குருநாகலில் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட சதுட்ட பில்டர்ஸ் (தனியார்) கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.