• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"ஏனைய அரச காடுகள்" ஆக கருதப்படும் காணிகளை மாவட்ட செயலாளர்களுக்கு / பிரதேச செயலாளர்களுக்கு கைம்மாற்றும் அவசியம்
- 'ஏனைய அரச காடுகள்' ஆக இனங்காணப்பட்டதும் வன பாதுகாப்பு திணைக்களத்தினால் அல்லது வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் முகாமிக்கப்படாததும் ஆனால் பிரதேச செயலாளர்களினால் முகாமிக்கப்படுவதுமான காணிகளின் நிர்வகிப்பானது முன்னாள் வனசீவராசிகள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளரினால் வௌியிடப்பட்ட 2001‑08‑10 ஆம் திகதியிடப்பட்டதும் 05/2001 ஆக இலக்கமிடப்பட்டதுமான சுற்றறிக்கையின் ஏற்பாடுகளுக்கு ஏற்ப வன பாதுகாப்பு திணைக்களத்தின் விடயநோக்கெல்லையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் ஆக்கபூர்வமான நோக்கங்களுக்காக அத்தகைய காணிகளை பயன்படுத்துவதற்கு தடையொன்றை ஏற்படுத்தியுள்ள கூறப்பட்ட சுற்றறிக்கைகளின் ஏற்பாடுகளுக்கிணங்க அத்தகைய காணிகளை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தும் போது நீண்ட நடைமுறையொன்று பின்பற்றப்பட வேண்டியுள்ளமையினால் கூறப்பட்ட 'ஏனைய அரச காடுகளில்' சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். இவ்விடயமானது அமைச்சரவையினால் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டதுடன் இந்த விடயம் பற்றி ஆராயுமாறும் 'ஏனைய அரச காடுகளை' வேறு ஏதேனும் நோக்கங்களுக்காக தற்காலிகமாக பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் இந்த நோக்கத்திற்கான தத்துவங்களை மாவட்ட செயலாளர்களுக்கு / பிரதேச செயலாளர்களுக்கு மாற்றும் அதேவேளை வன சுற்றாடல் மற்றும் வனசீவராசிகளின் செயற்பாடுகளுக்கு தீங்கு விளைவிக்காமல் கூறப்பட்ட காணிகளின் உரிமைத்துவத்தை மேலும் அரசாங்கத்திடமே தக்கவைக்கும் பொருத்தமான பொறிமுறையொன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறும் சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.