• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Millennium Challenge Corporation நிறுவனத்தின் Compact உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை
- Millennium Challenge Corporation நிறுவனத்துடன் கைச்சாத்திடப்படவுள்ள உத்தேச உடன்படிக்கை தொடர்பில் மீளாய்வுசெய்து சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட பேராசிரியர் லலிதசிறி குணருவன் தலைமைத்தாங்கிய குழுவானது அதன் இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதற்கிணங்க, மாண்புமிகு பிரதம அமைச்சரினால் இவ்விறுதி அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் கூறப்பட்ட அறிக்கையின் சிபாரிசுகள் தொடர்பில் அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களினதும் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.