• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட Srilankan Airlines நிறுவனத்தின் 2020 / 2021 காலப்பகுதியின் சார்பில் விமானசேவைகள் காப்புறுதியை புதுப்பித்தலும் கொள்வனவு செய்தலும்
– விமானசேவைகள் காப்புறுதியானது விமான நடவடிக்கைகளுக்கான கட்டாய தேவைப்பாடொன்றாக உள்ளதுடன் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் 2018 ஆம் ஆண்டில், வரையறுக்கப்பட்ட Srilankan Airlines நிறுவனமானது வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடமிருந்து காப்புறுதி காப்பீட்டை பெற்றுக் கொண்டுள்ளது. இக் காப்புறுதி காப்பீடானது வருடாந்தம் புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளதுடன் Srilankan Airlines நிறுவனத்தின் நிலையியல் தொழிநுட்ப மதிப்பீட்டு குழுவானது 2020 / 2021 ஆண்டிற்கான காப்புறுதி காப்பீடானது இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடமிருந்தே பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென சிபாரிசு செய்துள்ளது. அதற்கிணங்க, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடமிருந்து உரிய காப்புறுதி காப்பீட்டை 4.05 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு பெற்றுக் கொள்ளும் பொருட்டு சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.