• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மட்பாண்ட கூட்டுத்தாபனத்தை மீளமைப்பதன் கீழ் ஒட்டுசுட்டான் தொழிற்சாலையில் உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் கருத்திட்டம்
– Sampson Rajarata Tiles (Pvt.) Ltd., நிறுவனத்துடன் சேர்த்து இலங்கை மட்பாண்ட கூட்டுத்தாபனத்தின் விடயநோக்கெல்லையின் கீழ் வருகின்ற ஒட்டுசுட்டான் செங்கல் மற்றும் ஓட்டு தொழிற்சாலையின் உற்பத்தி செய்முறையை மீள ஆரம்பிப்பதற்கு அவசியமான ஒழுங்குகளைச் செய்வதற்கு 2020‑02‑05 ஆம் திகதியன்று அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும், கூறப்பட்ட தொழிற்சாலையை மீள ஆரம்பிக்கும் நோக்குடன் அதனை இலங்கை மட்பாண்ட கூட்டுத்தாபனம் ஏற்கனவே புனரமைத்துள்ளதுடன் மேலும், எதிர்காலத்தில் எந்தவிதமான தனியார் நிறுவனத்தினதும் பங்குபற்றுதல் இல்லாமல் அதன் உற்பத்தி செய்முறையை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தனியார் முதலீட்டாளர் ஒருவரின் பங்குபற்றுதல் இல்லாமல் இலங்கை மட்பாண்ட கூட்டுத்தாபனத்தினாலேயே அதன் உற்பத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சரும் கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சருமானவர் சமர்ப்பித்த பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.