• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நெற்செய்கைக்காக பயன்படுத்தப்படும் இரசாயன பசளையை ஏனைய கமத்தொழில் நடவடிக்கைகளுக்காக கொள்வனவு செய்வதற்கு இடமளித்தல்
– தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பசளை உதவுதொகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், 05 ஏக்கர் வரையில் நெற்செய்கைக்காக பசளை வழங்கப்பட்டுள்ள அதேவேளை கூறப்பட்ட விஸ்தீரணத்தை விஞ்சிய காணிகளுக்குத் தேவைப்படும் பசளை திறந்த சந்தையிலிருந்து கொள்வனவு செய்யப்பட வேண்டும். இச்சூழ்நிலைகளின் கீழ், விசேடமாக COVID – 19 உலகளாவிய முழுப்பரவல் நோய் நிலமையின் விளைவாக பயிர்செய்கையின் கீழுள்ள காணி விஸ்தீரணம் துரிதமாக அதிகரித்ததன் காரணமாக பசளைக்கான கேள்வி அதிகரித்துள்ளபடியால் ஏனைய பயிர்களுக்காக பயன்படுத்தப்படும் பசளையின் பற்றாக்குறை திறந்த சந்தையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதலால், நெற்செய்கைக்கான பசளை உதவுதொகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், இறக்குமதி செய்யப்பட்ட அரச உரக் கம்பனிகளிடமுள்ள எஞ்சிய பசளை இருப்புக்களை கமநல அபிவிருத்தி நிலையங்களினால் கொள்வனவு செய்வதற்கும் அரசாங்கத்திற்கு எதுவித பிரச்சினைகளையும் உருவாக்காது மேலதிகமாக தேவைப்படும் பசளை இருப்புகளை விவசாயிகள் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் 50Kg பசளை பையொன்றை (Bag) 1,000/- ரூபா தொகைக்கு விவசாயிகளுக்கு விற்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் அளிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.