• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சை 'கொவிஜன மந்திரயவில்' தாபித்தல்
– 2019‑12‑18 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அங்கீகாரத்திற்கேற்ப மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சை 'கொவிஜன மந்திரயவில்' மீளத் தாபிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் இந்த அமைச்சை தாபிப்பதற்கும் இதன் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கட்டடத்தின் தளக்கோலம் மீள ஒழுங்கமைக்கப்பட வேண்டுமென்பதுடன் மின்சார வழங்கல் முறைமை புனரமைக்கப்பட வேண்டும். ஆதலால், உரிய செயற்பாடுகளை அவசரமாக நிறைவேற்ற வேண்டுமென்றபடியால் கூறப்பட்ட புனரமைப்பு செயற்பாடுகளுக்குரிய மதியுரைச்சேவைகளுக்கான ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கும் நிர்மாண செயற்பாடுகளுக்கான ஒப்பந்தத்தை Central Engineering Services (Pvt.) Limited நிறுவனத்திற்கும் நேரடியாக கையளிப்பதற்காக மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.