• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசளைக் கொள்வனவு - 2020 (யூலை)
- 2020 யூலை மாத காலப்பகுதியின் போதான பசளைத் தேவைப்பாட்டிற்காக வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பனி (Lak Pohora) மற்றும் Colombo Commercial Fertilizer Company Ltd., (Commercial Fertilizer) நிறுவனம் என்பன சார்பில் பசளையை கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. கூறப்பட்ட விலைகள் தொடர்பில் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் செய்யப்பட்ட சிபாரிசு அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்வருமாறு குறிப்பிடப்பட்டவாறு பசளை வழங்கலுக்கான பெறுகையை கையளிப்பதற்காக மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் தழுவு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 9.000 + 5% மெற்றிக் தொன் யூரியாவை (Granular) மெற்றிக் தொன் ஒன்று 260.00 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் தொகைக்கு Agri Commodities & Finance FZE நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கும்.

* 6.000 + 5% மெற்றிக் தொன் Triple Super Phosphate மெற்றிக் தொன் ஒன்று 249.07 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் தொகைக்கு Aries Fertilizer Group Pvt. Ltd., நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கும்.