• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய கலாசார நிதியத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவதற்காக நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளல்
- மத்திய கலாசார நிதியமானது இதுவரை கடுமையான நிதி நெருக்கடியொன்றுக்கு முகங் கொடுத்துள்ளதுடன் ஊழியர்களின் சம்பளங்களையும் ஏனைய செலவினத்தையும் தாங்குவதில் சிரமங்களுக்கு இது வழிவகுத்துள்ளது. ஆதலால், நிலவும் சூழ்நிலைகளின் கீழ் மாதாந்தம் 135 மில்லியன் ரூபா கொண்ட ஏற்பாடொன்றை பெற்றுக் கொள்வதற்காக கூறப்பட்ட நிதியத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கை புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதற்கிணங்க, மேற்கூறப்பட்ட நிதியம் முகங்கொடுத்த பிரச்சினைகளுக்கு தீர்வொன்றாக பொதுத் திறைசேரியின் தலையீட்டுடன் உள்நாட்டு வங்கியொன்றிலிருந்து குறுங்கால கடன் கொடையொன்றை பெற்றுக் கொள்வதற்கு உதவுவதற்கும் அத்துடன் எதிர்வரும் காலத்தில் நாட்டில் சுற்றுலாத்துறை மீளமைக்கப்பட்டவுடன் மத்திய கலாசார நிதியத்தின் வருமானத்தை அதிகரித்து கூறப்பட்ட கடனை தீர்ப்பதற்கு அவசியமான ஒழுங்கினை செய்வதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.