• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-07-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 தொற்றுக்கு முகங்கொடுக்கும் பொருட்டு உதவும் முகமாக இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற கடன்கள், நன்கொடைகள் மற்றும் பொருள் ரீதியான உதவிகள்
- COVID – 19 உலகளாவிய முழுப்பரவல் நோய் நிலமைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய ஆரம்ப நடவடிக்கைகளுக்காக சில நாடுகளிலிருந்தும் சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் இலங்கை அரசாங்கத்தினால் கடன்கள், நன்கொடைகள் மற்றும் பொருள் ரீதியான உதவிகளாக 2020‑06‑12 ஆம் திகதிவரையான காலப் பகுதியின் போது கிடைக்கப்பெற்ற பங்களிப்புகள் தொடர்பில் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் அளிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதற்கிணங்க, இலங்கை COVID - 19 அவசரநிலை கவனிப்பு மற்றும் சுகாதார முறைமைகளை தயார்ப்படுத்தல் கருத்திட்டத்திற்காக 128.6 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி இணங்கியுள்ள அதேவேளை மற்றுமொரு 45 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் சமூக பாதுகாப்பு வலையமைப்பு கருத்திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன.

இலங்கை COVID - 19 அவசரநிலை கவனிப்பு மற்றும் சுகாதார முறைமைகளை தயார்ப்படுத்தல் கருத்திட்டத்தின் கீழ் இணங்கிகொள்ளப்பட்ட தொகையில் 57.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களும் அதேபோன்று சமூக பாதுகாப்பு வலையமைப்பு கருத்திட்டத்தின் கீழ் இணங்கிகொள்ளப்பட்ட 45 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் ஏற்பாட்டைக் கொண்ட மொத்த தொகையும் இது வரையும் நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன என்று அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அதற்கு மேலதிகமாக, அண்ணளவாக 75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதி கொண்ட நன்கொடைகளும் கிட்டத்தட்ட 8 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதி கொண்ட பொருளுதவி இருப்பும் மேலே குறிப்பிடப்பட்ட திகதிவரை அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.