• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாட்டிற்கு வௌியே மேற்கொள்ளப்படும் அந்நிய செலாவணி அனுப்பீடுகளை வரையறுப்பதற்கும் வௌிநாட்டு வைப்புக் கணககுகள் சம்பந்தமான கட்டளைகளை வௌியிடுவதற்கும் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
- நாட்டிற்கு வௌியே அனுப்பப்படும் சில அனுப்பீடுகளை மூன்று (03) மாத காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்துவதற்கு 2020 ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதோடு, அதற்கிணங்க, அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழான ஏற்பாடுகளின் பிரகாரம் 2020‑04‑02 ஆம் திகதியுடைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் உரிய கட்டளைகள் வௌியிடப்பட்டுள்ளன.

அதேபோன்று விசேட வைப்பு கணக்குகள் ஊடாக நாட்டிற்குள் அந்நிய செலாவணியை அனுப்புவதற்கு ஊக்குவிக்கும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு 2020 ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

குறித்த அமைச்சரவைத் தீர்மானங்களின் பிரகாரம் 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழும் இதே சட்டத்தின் 29 ஆம் பிரிவின் கீழும் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகள் முறையே 2020‑04‑02 ஆம் 2020‑04‑08 ஆம் திகதிகளைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த கட்டளைகளுக்குரியதாக மேலும் பின்வருமாறு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* நாட்டிற்கு வௌியே அனுப்பப்படும் அனுப்பீடுகளை வரையறுப்ப தற்குரியதான கட்டளைகள் உள்ளடக்கப்பட்டு வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்தை 2020 யூலை மாதம் 25 ஆம் திகதியிலிருந்து மேலும் ஆறு (06) மாத காலத்திற்கு நீடித்தல்.

* விசேட வைப்பு கணக்குகள் ஊடாக நாட்டிற்குள் அந்நிய செலாவணியை அனுப்புவதற்கு ஊக்குவிக்கும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்ட வழிமுறைகளை நடைமுறைப்படுத்தும் போது நடைமுறையிலுள்ள அந்நிய செலாவணிச் சட்டம், வௌ்ளைப் பணமாக்கல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குதலைத் தடுத்தல் என்பவற்றுக்குரிய சட்டங்களிலுள்ள ஏற்பாடுகளின் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளை குறைக்கும் பொருட்டு 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் 29 ஆம் பிரிவின் கீழான கட்டளைகளை உள்ளடக்கி வௌியிடப்படடுள்ள 2020‑04‑08 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை திருத்தி புதிய வர்த்தமானி அறிவித்தலொன்றை வௌியிடுதல்.