• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 இற்குப் பின்னரான பொருளாதார புத்துயிரளிப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கான வரிச் சலுகை நடவடிக்கைக
- அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் 2019 நவெம்பர் மாதம் 26 ஆம் திகதியிடப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட 'பொருளாதார புத்துயிரூட்டல் முன்னெடுப்பு' என்னும் அமைச்சரவைக் குறிப்புக்குரிய தீர்மானத்தின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் அடங்கலாக அனைத்து தரப்பினர்களுக்கும் எளிமையான வௌிப்படைத் தன்மை வாய்ந்த, வினைத்திறன் மிக்க வரி முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும், COVID - 19 தொற்றின் காரணமாக நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின்பால் நெருக்கடியான நிலைமை உருவாகியுள்ளதோடு, முக்கியமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு அவர்களுடைய வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு போதுமான வசதிகளை அளித்து, அவர்களுடைய வரிச் சுமையை இலகுபடுத்தும் பொருட்டு வரி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமுல்படுத்துவது அத்தியாவசியமானதாகவுள்ளது. இதற்கிணங்க, 2020 யூன் மாதம் 03 ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் COVID - 19 காரணமாக நாடு மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் சகல வித வரிகளுக்குமான தண்டத் தொகையிலிருந்து விலக்களிப்பதற்கும் மீண்டும் அத்தகைய தண்டத் தொகை அறவிடலை 2020 யூலை மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. குறித்த சலுகைக்கு மேலதிகமாக பின்வரும் சலுகைகளையும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்குவதற்கும் இதற்கிணங்க உரிய சட்ட ஏற்பாடுகளைத் திருத்துவதற்கும் சட்ட ஏற்பாடுகள் அமுல்படுத்தபடும் வரை இந்த சலுகைகளை உடனடியாக நடைமுறைப்படுத்து வதற்கும் உரியதாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. * வேண்டுமென்றே வரிசெலுத்த தவறவில்லையென உள்நாட்டு இறைவரி ஆணையாளர் திருப்தியுறுவாராயின் 2018/2019 மதிப்பீட்டு ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ள மதிப்பீட்டின் மீது செலுத்தப்படவேண்டிய நிலுவை வருமான வரி சார்பில் விலக்களித்தல். * 2019/2020 மதிப்பீட்டு ஆண்டுசார்பில் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பித்து வரி செலுத்தியுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு மீண்டும் மேலதிக மதிப்பீட்டினை வழங்காதிருத்தல். * வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடொன்றைச் சமர்ப்பிக்கும் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய வங்கி பிணை அல்லது மீளச் செலுத்தப்படாத தொகை செலுத்துதல் என்பன சார்பில் வழங்கப்படும் காலப்பகுதியை நீடித்தல். * உள்நாட்டு இறைவரி திணைக்களத்துடன் ஏற்கனவே உடன்பட்டுள்ள நிலுவை / தவறுகை வரிச் செலுத்துகை சார்பில் சலுகைக் காலமொன்றை வழங்குதல். * வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கைப்பற்றல் அறிவித்தல்களின் நடைமுறைப் படுத்தலை 2021 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிவரை இடைநிறுத்துதல். * 2020 மார்ச் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 2020 யூன் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குரிய அத்தகைய ஏதேனும் வரிச் செலுத்துகை அத்துடன் / அல்லது வரி அறிக்கைகளை வழங்குதல் 2020 திசெம்பர் மாதம் 31 ஆம் திகதியன்றில் அல்லது அதற்கு முன்னர் மேற்கொள்வதற்கான வசதியினை செய்தல் மற்றும் உரிய வரிச் செலுத்துகை / அறிக்கை கையளித்தல் உரிய திகதியன்றில் மேற்கொள்ளப்பட்டதாக கருதுதல்.