• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-06-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கப்பல்களிலிருந்து லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இறங்குதுறை வரை நிலக்கரி ஏற்றி இறக்குவதற்காக இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்திற்கும் M/s.United Shippers Limited நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தை நீடித்தல் - 2020/2021
- கப்பல் களிலிருந்து லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இறங்குதுறை வரை நிலக்கரி ஏற்றி இறக்குவதற்காக இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்திற்கும் இந்தியாவின் M/s.United Shippers Limited நிறுவனத்திற்கும் இடையிலுள்ள ஒப்பந்தமானது 2020 ஏப்ரல் மாதம் முடிவடைந்துள்ளது. குறித்த ஒப்பந்தத்தை 2020/2021 ஆண்டு சார்பில் மேலும் ஒரு (01) வருட காலத்திற்கு நீடிக்கும் பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரினாலும் மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.